Pages

Tuesday 27 December 2011

சாதிநூல்-5


5. 1880 - வேளாண் மரபியல்:
                ‘வேளாளர்களுக்கும் சென்னை மியூனிசிபல் கம்மிஷனர்களுக்கும் நடந்த இங்கிலீஷ்சரித மொழிபெயர்ப்பும் அதன் உபந்தியாசமும்’ - இதனை இங்கிலீஷ்பயிற்சி யில்லாதவர்களுக்கும் உபயோகமாகும்படி தமிழில் மொழிபெயர்த்துத் தரவேண்டுமென்று - பாண்டூர்மிட்டா ஜமீன்தார் மகா மகா ஸ்ரீ குன்றத்தூர் - சோமசுந்திரமுதலியாரவர்கள், விச்சூர்மிட்டா ஜமீன்தார் மகா மகா ஸ்ரீ திருவூர் தெய்வராயகமுதலியாரவர்கள் - இவர்கள் கேட்டுக்கொண்டபடி, சென்னைத் துரைத்தன சங்கத்தமிழ்ப்புலமை சமரசவேத சன்மார்க்க சங்கம் மகா மகா ஸ்ரீ தொழுவூர். வேலாயுதமுதலியார் அவர்களா லியற்றப்பட்டு - மகா மகா ஸ்ரீ கூடலூர் சுப்பையாப்பிள்ளை அவர்களால் அச்சிற்பதிப்பிக்கப்பட்டது. PRINTED AT  THE SCOTTISH PREES BY GRAVES, COOKSON & CO 1880 - விலை 8 அணா - தபால் செலவு ஒரு அணா என்றும் விளம்பரமும் உள்ளது - 1871இல் எடுக்கப்பட்ட குடித்தொகை மதிப்பில் வேளாளர்களை சூத்திரர் என்று குறித்தது தகுதி குறைவானதும் நியாயவிரோதம் என்று கூறி காசி - விஸ்வனாதமுதலியார் குடிமதிப்புச் சபையாருக்கு எழுதிய கடிதமும் வேளாளர் வைசியர் எனக்குறித்து எழுதப்பட்ட பின்னிணைப்பு விவரங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல் குடிமதிப்புச்சபை கமிஷ்னர் மிஸ்டர் கோவர்துரை வேளாளர்களை வைசியர்களாக ஏற்றுக்கொள்ள ஆட்சேபம் இல்லை என்று வேளாளர்க்கெழுதிய கடிதமும் உடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நூலில் வேளாளர் வைசியர் எனக்காட்ட பூவைசியர், தன வைசியர், கோவைசியர் என்ற புதிய நிகண்டில் இல்லாத செய்திகள் சொல்லப்பட்டுள்ளன பின்வரும் நூல்களில் இவை கண்டிக்கப்பட்டுள்ளன. பூ - என்றால் பூமி - எனவே பூமியை உழுது வாழ்பவர்கள் வேளாளர் என்று இதன் பொருத்தப்பாட்டை விளக்குகிறது. சூத்திரர் சாஸ்திரப்பிரகாரம் வேதம் ஓதக்கூடாது என்பதனை எடுத்துக்காட்டி தாங்கள் வேதம் ஒதுவதால் வைசியர் ஆவோம் என்கிறது. நால்வருணங்களை விளக்கி அவைகளின் தொழில்முறையை நிகண்டகராதிகளின் துணைகொண்டு விளக்குகிறது. வேளாளர்கள் காணியாட்சி சுதந்திரம் (மிராசி ரையிட்) பெற்றவர்கள் என்றும் தமிழ்ச்சாதிகள் பதினெட்டும் இவர்களின் அடிமைகள் என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். பறையர் பண்ணையாருக்கு (வேளாளர்) எழுதிக்கொடுத்த அடிமை சாசனம் அநுபந்தமாக கொடுக்கப்பட்டதினால் வேளாளர்கள் தங்களை ஆண்டைகளாகக் கட்டமைத்துக்கொண்டனர். ஜாதிகுலம் பொய்யென்ற நூல்களின் கருத்தை விளக்கி வருணாச்சிரமகங்களின் பயன்களைக் இறுதியாகக் குறிப்பிடுகிறது. சூத்திரர் வைசியாபிமானம்கொண்டு எழுதிய நூல் இதுவென பின்வந்த சாதிநூல்கள் கண்டிக்கின்றன.

No comments:

Post a Comment