Pages

Tuesday 27 December 2011

சாதிநூல்-4


4. 1875 - சாதிநூல் (TREATISE ON cASTE):
                        திருவாரூரிலெழுந்தருளியிருந்த ஞானப்பிரகாசசுவாமிகள் ஆரியபாஷையிலுள்ள ஆகமபுராண இதிகாசநூல்களினாதாரங்களைக் கொண்டு இயற்றியது. இந்நூல் -தொண்டைமண்டலம் மயிலை சந்திரசேகர நாட்டாரவர்களாலும் திருவல்லிக்கேணி சண்முககிராமணியாரவர்களாலும் பரிசோதித்து - சென்னை கலாநிதி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. சாலி - 1797-ககுச்சரியான பவவருஷம் 1875இல் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது-இந்நூல் சான்றோர்எனப்பெயர் புனைந்து வாழ்ந்துகொண்டிருந்த சேர சோழ பாண்டியர் வம்ச வழியினர் தாம் என¢சில சாதியார் கூறுவதைக்கண்டிக்கும் விதமாகவும், சென்சஸ் சபையார்களின் அறிவை மயங்க வைத்த சில நூல்களையும் கண்டித்து சுப்ரபேதம் (ஆகமம்) வைகானசம்,வியாசர்நூல், சூதசங்கிதை போன்ற நூல்களின் ஆதரவைக்கொண்டு பல பிரதி ரூபங்களைக்கொண்டு பரிசோதித்து அச்சிட்டதாக அதன் பாயிரம் குறிப்பிடுகிறது.                           இதில் சாதிகளின் உற்பத்தி, அவைகளின் தொழில், சமூக அந்தஸ்து இவைகளைக்குறித்து செய்யுள் வடிவமாக எழுதப்பட்டுள்ளது. சாதிகளின் உற்பத்தியை விளக்கும்போது சுத்தசாதி உற்பத்தி என்றும் சங்கர (கலப்பு) சாதி உற்பத்தி என்றும் பிரித்து, அதில் சங்கரசாதி என்போர் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரசாதிகள் என்றும் இவர்களின் தப்பான கூடலால் பிறந்தவர்களே சங்கரசாதியினர் என்று குறிப்பிடுவதைப் பார்க்கலாம் - சங்கர சாதிகளின் விவரம் குறிப்பிடுகையில் அநுலோம, பிரதிலோம, அந்தராள உற்பத்தியினைக் கூறுகிறது. மேலும் இந்த சங்கர சாதிகள் களவில் தம்முற்கூடி விராத்தியர் என்ற புதியவகை கலப்புசாதியினை உண்டுபண்ணுவதாகவும் இன்னும் பலவும் விளக்கப்பட்டுள்ளன-இந்நூலின் அநுபந்தமாக 96 சாதிகளின் பெயர்களும் காரணங்களும் பட்டியலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேற்படி தவல்களின் ஊடாக அவரவர் சாதிக்குரிய தொழிலையும் தகுதியையும் உற்பத்தியையும் குடிமதிப்புச்சபையார் தெரிந்துகொண்டு அதன்படி அவர்கள் சாதியை அங்கிகரிக்கவேண்டும் எண்ணம் கொண்டதாக இந்நூல் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. மரபாக வகுக்கப்பட்ட சாதிய மதிப்பீடுகள் பிரித்தானியர் ஆட்சியில் மாற்றம் பெறுவதை நம் அறிவுஜீவிகள் இதுபோன்ற நூல்கள் எழுதி தம்புலமையை நிலைநாட்டியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இதில் கள்விலைஞரான சாணார் (சான்றார்) உற்பத்தி வருடத்தில் சான்றார்என்பதர்க்குபதில் பழையர்என்று வந்துள்ளதையும் இந்நூலின் பிரதிகளை பரிசோதித்தவர்கள் மேற்படி சான்றார் குலத்தினர் என்பதாலும் இது நாடார்சாதிக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ளதை நோக்கமுடிகிறது - இச்சாதிநூலையே உலகநாகப்பண்டிதர் எழுதியதாக சாதிபேத விளக்கம் என்று பெயர்மாற்றி யாழ்ப்பாணம் சி. செல்லையாபிள்ளை,                            நா. சிவசுப்பிரமணிய சிவாச்சரியாகும் அச்சிட்ட நூலில் பழையர் என்றதற்குப் பதில் சான்றார்என்று அச்சிட்டிருப்பதையும் காணமுடிகிறது - ஒரு சாதிகுறித்தான இருநூல்களில் வேறுவேறு விதமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நோக்கும்போது சாதிநூல்களின் சாதிய அரசியல் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதைப் பார்க்கிறோம். பின்னட்டையில் இந்நூல் குறித்த விளம்பரமும் உள்ளது.

2 comments:

  1. அன்புடையீர் நான் ‘சாதிநூ’லையும் \சாதிசங்கிரகசார|த்தையும் மீண்டும் அச்சிடலாம் என்று முயன்றுவருகிறேன். இந்த இரு புத்தகங்களின் மோசமான பிடிஎஃப் புத்தகக் கோப்புகள்தான் என்னிடம் இருக்கின்றன,உங்களிடம் தெளிவான பிரதிகள் இருந்தால் ஜெராக்ஸ் எடுத்தோ அல்லது பிடிஎஃப் பிரதிகளாகவோ தந்துதவ முடியுமா? நன்றியுடன் உங்கள் உதவியைப் பதிவுசெய்வேன். Dr.K.Subramanian,155,East St.,Nehru Nagar. Sathyamangalam 638402. email: kasu.layam@gmail.com Moble: 9442680619 Facebook/Kaala.Subramaniam

    ReplyDelete
    Replies
    1. ஐயா எனக்கு இந்த நூல் வேண்டும்
      உங்க எண் கிடைக்குமா ஐயா

      Delete