Pages

Monday, 19 December 2011

சாதிநூல்-2


2. 1872 - சித்தூர் ஜில்லா அதாத்துக்கோர்ட்டுத் தீர்ப்பு:
இந்நூல் விஸ்கர்மா வகுப்பைச் சார்ந்த பண்டிதர் மார்கசாய ஆசாரிக்கும் விப்பிராள் (பார்ப்பனர்) ஆன பஞ்சாங்கங்குண்டையருக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில் விஸ்வப்பிராமணிகத்தைக்குறித்து நடந்த வாதமும் - பஞ்சாயத்தார் தீர்மானமும் - பண்டிதர் சோமசுந்தரப்பிள்ளை சம்பாஷணையும் - மேஜிஸ்திரேட்துரைகள் கொடுத்த டைரியும் - சித்தூர்ஜில்லா அதாலத்துகோர்ட்டு மகாகனம் பொருந்திய கவரன்மெண்டஜட்ஜி டேக்கர் துரையவர்கள் கொடுத்த தீர்ப்பும் - சென்னப்பட்டணம் விஸ்வபிரம்ம சபையார் கேட்டுக்கொண்டபடி- முனியப்பாச்சாரியாரால்-கலாரத்நாகர அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன - சாலிவாகநசக வருடம் 1794இல் தமிழ் பிரஜோத்பத்தி வருடம் சித்திரை மாதம் (1872) ரிஜிஸ்டர்செய்யப்பட்டது. இப்பிரதிக்கிணங்க வேலூர் குமாரஸ்வாமி முதலியாரது வாணீவிலாச அச்சுக்கூடத்திற் 1892ஆம், சென்னைஇட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்களது ஸ்ரீ பத்மநாப விலாச அச்சியந்திரசாலையிற் 1908-ம், திருமயிலை - பரமசிவ முதலியாரால் திருமயிலை மாணிக்கவேலு முதலியார் அவர்களால் தமது வித்வசிரோமணி விலாச அச்சியந்திரசாலையிற் 1930ஆம் (12 அணா), சென்னை மண்ணடி பூ.ரா அப்பாத்துரை முதலியார் அவர்களது, சரவவணபவ அச்சியந்திரசாலையில் 1934ஆம் பதிப்பிக்கப்பட்டன (விலை 12 அணா)- 1934ஆம் பிரதியே நாம் இங்கு ஆய்விற்கு எடுத்துக்கொண்டது - இதன் முகப்பிற்குப் பின்னட்டையில் சென்னைப் பட்டணம் விஸ்வப்பிரம்ம சபையின் கையொப்பக்கார்களாக தி.நா. மாசிலாமணி ஆசாரியார் முதல் தா. சுந்தராசாரி வரை 198 பேர்களின் பட்டியல் உள்ளது - விஸ்வகர்ம வகுப்பினருக்கு பண்டிதர் மார்க் கசாய ஆசாரி திருமணம் செய்து வைத்தது செல்லாது என்று கூறி பார்பனனான பஞ்சாங்க குண்டையன் பஞ்சாயத்தில் பிராது கொடுக்க இவ்இருவருக்குள் நடந்த சம்பாஷனையில் மார்கசகாயத்திற்கு தீர்ப்பானது - இதனால் விஸ்வகர்மா வகுப்பினர்க்கு இனி அவர்கள் வகுப்பில் சிறந்தோர் மணம் செய்து வைக்கலாம் என்று சித்துர்ஜில்லா அதாலத்துக்கோர்ட்டில் 1818இல் தீர்ப்பானது பார்ப்பன புரோகிதத்தை மறுத்து அவர்கள் சமூகத்தலைவர்களே மணம்செய்துவைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது- இந்த விவாதத்தில் மார்க சகாயம் விப்பிராள் (பார்ப்பனர்) பிறப்பு மற்றும் இந்து மதத்தில் உள்ள ஆபாசங்களை விளக்கியுள்ளார் - மேலும் திரிமூர்த்திகளின் கதையைக் கூறும் புராணங்கள் பொய்யென்கிறார் - இவர் உயிர்களைக் காப்பாற்றுவது சூத்திரனின் பெருமை என்றும் சூத்திரருக்கும் வேதோ அத்யயனம் செய்யும் உரிமை உண்டென்கிறார் - இவர் திருமால் நெறியைவிட சிவநெறிக்கு முக்கியம் கொடுத்துப் பேசியதை இந்நூலில் பல பக்கங்களில் காணலாம். வாதியான மார்க சகாயத்திற்கு கலியாண சாமக் கிரியை நஷ்டம் ரூபாய் 550 தரவேண்டும் என்று பிரதிவாதிகளுக்கு கோர்ட்டார் உத்தரவிட்டனர் - விஸ்வகர்மா ஜ் பார்ப்பனர் இவர்களுக்கிடையில் நடந்த தீர்ப்பு, சம்பாஷனை,  


விவாதம் முதலியவைகளை பிறரும்அறியும் வண்ணம்                                                இத்தீர்ப்பு மேற்படி தலைப்பில் அச்சிடப்பட்டது. அதன்இறுதியில்
இத்தீர்ப்பு முதலானதை மித்துரு - சத்துரு - அயலாரென்று எண்ணாமல் ஆதியோடந்தமாய்பப் பார்வையிட்டால் துன்மாக்க மற்றுச் சன்மார்க்கத்துக் களாளவதற்கு யாதொரு சந்தேகமில்லை’’ (1934:முன்னுரை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment